அதிரடியாக சிலிண்டர் விலை உயர்வு
LPG Gas Cylinder Price: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதத்திற்கான எரிவாயு விலையை வெளியிட்டுள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) சிலிண்டருக்கு 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் (LPG Cylinder Hike) விலையை ரூ .25 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .850.50 இல் இருந்து ரூ .875.50 ஆக அதிகரித்துள்ளது.
பிப்ரவரி 4-ம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15-ம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்டன. பிப்ரவரி 25-ம் தேதி மறுபடியும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அடுத்து மார்ச் மாதம் 1-ம் தேதி 25 ரூபாய் உயர்த்தினார்கள்.