ஆப்கானிஸ்தானில் விமான சேவை ரத்து

ஆப்கானிஸ்தான் காந்தஹாரிலிருந்து விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாலிபான்கள் நாடு தழுவிய இராணுவ வெற்றியை உறுதிப்படுத்திய பின்னர் அதிபர் கானியுடன் நாட்டின் பல முக்கிய தலைவர்களும் நாட்டை விட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தாலிபான் கிளர்ச்சிக் குழுவின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கானி பராதர் ஆப்கானிஸ்தனின் புதிய அதிபராகக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனைத் தொடர்ந்து, மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களில் ஒருவேளை ஆப்கனில் நிலைமை மோசமடையும் பட்சத்தின் ஆப்கனில் வசிக்கும் மற்ற இந்தியர்களையும் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு நிலைமையை கவனித்து வருகிறது. அதன்படி ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்கியது. இதன்படி ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றது. அங்கிருந்து 129 பேர்களுடன் புறப்பட்ட அந்த விமானம் டெல்லி வந்து சேர்ந்தது

Leave a Reply

Your email address will not be published.