Ola electric scooters ஷோரூமில் கிடைக்கும்
முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் ஓலா 100,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றது.
* S1 மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆகவும், மைலேஜ் ஒரு முழுமையான சார்ஜில் 121 கிமீ ஆகவும் உள்ளது. நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. இந்த மாடலில் 0 முதல் 40 கிமீ வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிப்பிடித்துவிடலாம். 2.98 kWh திறனுள்ள பேட்டரி. 5 வண்ணங்களில் இந்த பைக்கை பெறலாம். இந்த மாடலின் எடை 121KG ஆகும். வீட்டு சார்ஜரை பயன்படுத்தினால் இதனுடைய பேட்டரி முழுமையாக சார்ஜ் அடைய 4.48 மணி நேரங்கள் தேவைப்படும். எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் இதன் விலை ₹ 99,999 ஆகும்.
* S1 Pro மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ ஆகவும், மைலேஜ் ஒரு முழுமையான சார்ஜில் 181 கிமீ ஆகவும் உள்ளது. நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என மூன்று ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. இந்த மாடலில் 0 முதல் 40 கிமீ வேகத்தை 3 நொடிகளில் எட்டிப்பிடித்துவிடலாம். 3.97 kWh திறனுள்ள பேட்டரி. 10 வண்ணங்களில் இந்த பைக்கை பெறலாம். இந்த மாடலின் எடை 125KG ஆகும். வீட்டு சார்ஜரை பயன்படுத்தினால் இதனுடைய பேட்டரி முழுமையாக சார்ஜ் அடைய 6.30 மணி நேரங்கள் தேவைப்படும். எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் இதன் விலை ₹ 1,29,999 ஆகும்.