பல்லாவரம் பகுதியில் 75வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சி!
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது, அதன் ஒரு நிகழ்வாக பல்லாவரம் யாசின்கான் தெருவில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் சார்பாக சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
இதில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக
தொழிலதிபா் திரு/ஆசிக்,
வழக்கறிஞர் திரு/ரவிசந்திரன்,
தொழிலதிபா் திரு/காஜா மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் இளைஞா்கள் நற்பணி மன்றம் முஹம்மது அஜீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் யாசிகான் நற்பணி மன்றம் இளைஞா்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி : N.அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்