குன்றத்தூர் பேரூராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனை தொடர்ந்து குன்றத்தூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 7 ஹில்ஸ் நகர் சாலையோர கால்வாய்களில் குப்பைகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகிறது.
மேலும் கொசுக்களால் டெங்கு,மலேரியா,காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் 7 ஹில்ஸ் நகர் பொது மக்கள் குன்றத்தூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்கள்,
உடனே குன்றத்தூர் பேரூராட்சி மேலதிகாரி
திரு/ தன்ராஜ்
சம்பந்தபட்ட 7 ஹில்ஸ் நகர் பேரூராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்,
குன்றத்தூர் பேரூராட்சி துய்மை பணியாளர்கள்
விரைந்து செயல்பட்டு சாலையோர கால்வாய்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
குன்றத்தூர் 7 ஹில்ஸ் நகரில் குடியிருக்கும் பொதுமக்கள் பேரூராட்சி அதிகாரிகளுக்கும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டினார்கள்.
செய்தி: S.MD. ரவூப்