பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது

தமிழகத்தில் நாளை, அதாவது ஆகஸ்ட் 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.  அதற்கு முன் கடந்த 9ம் தேதி தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

தமிழகத்தின் வெள்ளை அறிக்கை (White Paper Report), திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்த்துகிறதோ என்பதோடு,  கட்டணயேற்றம் , விலையேற்றம் , வரியேற்றம் , போன்றவற்றை செயல்படுத்துவதற்கான அடித்தளமாக அமையுமோ என்று அனைத்து தரப்பு மக்களிடமும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சென்னை மேற்கு சைதாப்பேட்டை  இடையே மீண்டும் அரசு பஸ் சேவை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், இந்த ஆட்சி மக்கள் சேவைக்காவே செயல்படும் எனவும், நிதி சுமை பற்றி கவலைப்படவில்லை எனவும் கூறியதோடு, பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என உறுதி அளித்துள்ளார். 

மேலும், போக்குவரத்து துறை புதிய பொலிவுடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதோடு, அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published.