முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினர்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு.
2014 ஆம் ஆண்டில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவியேற்றபின் அவரது உறவினர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு பல டென்டர்களை கொடுத்து வந்துள்ளார். 462.02 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மாநகராட்சி டென்டர், 346.81 கோடி ரூபாய்க்கான கோவை மாநகராட்சி பணிகளுக்கான அரசு டென்டர் என மொத்தமாக 810 கோடி ரூபாய்க்கான டெண்டர் எஸ்.பி.வேலுமணி உறவினர்களும் நண்பர்களும் நடத்தும் பல்வேறு நிறுவனங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதே வருடம் அதிமுக ஆட்சி முடியும் வரை பல கோடி ரூபாய்க்கான அரசு கான்ட்ராக்டுகளும்,டென்டர்களும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தான் சம்பந்தப்பட்ட நிறுவங்களுக்கு பல கோடி ரூபாய் லாபத்தை கொடுத்துள்ளதாக FIR கூறுகிறது.
