பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் புடின்
பிரதமர் மோடி, தனது உரையில் கடல்சார் பாதுகாப்புக்கு அத்தியாவசியமான 5 அடிப்படை கொள்கைகளையும் முன்வைத்தார்.
“ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவியை வகிக்கும் ஒருவர் என்ற முறையில், இந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான தலைப்பான, கடல்சார் பாதுகாப்பில் உள்ள நவீன சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்த உங்களது விவாதத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். உங்களது முயற்சி, சர்வதேச அரங்கில் இந்தியா பாரம்பரியமாக ஆற்றிய ஆக்கபூர்வமான பங்கிற்கு ஏற்ப உள்ளது, இதனால் பன்முகத்தன்மையுடன், பரஸ்பர நலன் மற்றும் சமமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் சிறந்த பங்கை ஆற்றியுள்ளீர்கள்”என்று புடின் கூறினார்.
ரஷ்ய கூட்டமைப்பு கடல் சார் குற்றங்களை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்கொள்ளும் பணியை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது என்பதையும், இந்த பகுதியில் சமமான சர்வதேச ஒத்துழைப்பின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க ரஷ்யா தயாராக இருப்பதையும் புட்டின் மீண்டும் உறுதிப்படுத்தினார்.