முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை.
அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து இருப்பதாக கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை செய்து வரும் நிலையில், தமிழகத்தில் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான சிலரது வீடு உட்பட 15 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடதக்கது.