பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி
பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.