OTT இல் வெளியாகிறது இயக்குனர் சிம்பு தேவனின் கசட தபற ஆந்தலாஜி.

இயக்குனர் சிம்பு தேவனின் கசட தபற ஆந்தாலஜி திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.

இதற்கிடையில் சமீபத்தில் நவரசா என்ற தலைப்பில் ஒன்பது இயக்குனர்கள் இயக்கி ஆந்தாலஜி வெளிவந்தது. இவற்றில் புத்தம் புது காலை மட்டும் திரையரங்கில் வெளியானது. மற்ற இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளி வந்தன. 

விஜய்யை வைத்து 2015ம் ஆண்டு வெளியான புலி திரைப்படத்தை இயக்குநர் சிம்புதேவன். அதன் பிறகு எந்த திரைப்படமும் இயக்காமல் இருந்த சிம்பு தேவன் கசடதபர (Kasada Thapara) என்ற ஆன்தாலஜி படத்தை இயக்குகிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ரெஜினா,பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி, வெங்க பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன், சம் சிஎஸ், யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான், ஷான் ரோல்டன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.   தற்போது ‘கசட தபற’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கட் பிரபு. அதன்படி இந்த புதிய ஆந்தாலஜி படம் சோனி லைவ் ஓடிடி நிறுவனத்தில் நேரடியாக வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.