உலகம் லாட்டரியில் 1028 கோடி வென்ற வயதான தம்பதி! December 11, 2020December 31, 2020 admin 0 Comments கண்கலங்க வைத்த தியாகம்!பிரிட்டனில் வசிக்கும் பிரான்சிஸ் – பேட்ரிக் தம்பதி பிரபல பிரிட்டனின் தி நேஷனல் லாட்டரியின் யூரோ மில்லியன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் 1028 கோடி ரூபாய் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.2019 ஜனவரியில் இந்த ஜோடி வெற்றியாளராக ஆனபோது இதுவே 25 ஆண்டு வரலாற்றில் லாட்டரியில் வெல்லப்பட்ட நான்காவது மிக அதிக தொகையாகும். மிக பெரிய பெரிய தொகையை வென்ற பிறகும்,இந்த தம்பதி செய்த காரியம் கேட்பவர்கள் அனைவரையும் பெரும் வியப்பில் தள்ளியது. லாட்டரியில் 1028 கோடி ரூபாயை வென்ற இந்த தம்பதி வெற்றிக்கு பிறகு தங்களுக்கென்று 2 லட்சத்தை விட குறைவான விலையில் ஒரு செகண்ட் ஹேண்ட் ஜாகுவார் காரையே வாங்கிக்கொண்டுள்ளனர்.இவர்களுடைய மகள்களும் செகண்ட் ஹேண்ட் கார்களைதான் பயன்படுத்துகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி லாட்டரியை வென்ற பிறகு இந்த தம்பதி அவர்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர்.பின்னர் அந்த பணத்தை உபயோகித்து இவர்கள் சுமார் 175 குடும்பங்களுக்கு உதவியுள்ளனர். இந்த தம்பதியின் உதவியால் இவர்களுடைய நண்பர்கள் பலரும் புதிய வீடுகளை வாங்கியுள்ளதாவும், தங்களுடைய கடன்களையும் திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.”லாட்டரி வென்ற சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தொகையில் பாதிக்கும் மேல் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 600 கோடி இப்படி மற்றவர்களுக்கு உதவியாக வழங்கியுள்ளதாக தற்போது பிரான்சிஸ் இங்கிலாந்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.பணம் கொடுத்தார்களோ, அவர்களும் மற்றவர்களுக்கு உதவியுள்ளதாகவும், இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், நகைகளை வாங்குவதை விட இப்படி மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பதிலேயேதனக்கு அதிக சந்தோஷம் கிடைப்பதாகவும் பெருந்தன்மையாக கூறியுள்ளனர்.அஸ்லம்,செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.