சிம்பு படத்தின் புதிய டைட்டில் இன்று வெளியீடு.
சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தின் புதிய டைட்டில் மற்றும் பஸ்ட் லுக் இன்று மதியம் 12.15 க்கு வெளியாகிறது.
இந்திலையில் கடந்த பிப்ரவரி மாதம் கவுதம் மேனன் பிறந்த நாளான 25-ம் தேதி இந்த படத்தை பற்றின அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தலைப்பை மாற்றி புதிய தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக் இன்று மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தை இன்று வரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். சிம்பு மற்றும் த்ரிஷாவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்தது இந்த திரைப்படம். அதனைத்தொடந்து சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் மீண்டும் இணைந்தார்கள். இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்தள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.