41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டி (Indian Hockey Team) இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – ஜெர்மனி அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் 2வது நிமிடத்திலேயே ஜெர்மனி அணி கோல் அடித்து முன்னணி வகித்தது.

முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து. ஆனால் இந்தியாவால் முதல் கோலை பதிவு செய்ய முடியவில்லை. ஆனால் இரண்டாம் கால் ஆட்டத்தில் தனி ஒருவனாக பந்தை விரட்டிச் சென்ற இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர் இந்தியாவுக்கான முதல் கோலை பதிவு செய்தார்.

அதன் பின்பு ஜெர்மனி 2 கோல்களை அடுத்தடுத்து விளாசி அதிர்ச்சி கொடுத்தது. விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மனம் தளராது விளையாடி வந்தனர். இந்திய வீரர்கள் அடுத்து கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை கோலாக்கினார். பின்பு இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் இந்தியாவுக்கான 3வது கோலை பதிவு செய்தார். இதனையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 3, ஜெர்மனி 3 கோல் என சமநிலையில் இருந்தது. 

முதல் பாதி முடிவடைந்ததும் இந்திய வீரர் ருபிந்தர் சிங் பால் அற்புதமான கோலை பதிவு செய்தார். இதனையடுத்து ஜெர்மனி வீரர் செய்த தவறால் இந்தியாவுக்கு பெனால்ட்டி ஸ்டோக் வாய்ப்பு கிடைத்து. இதனை சிம்ரன்ஜீத் கவுர் எதிர்கொண்டு 5வது கோல் அடித்தார். இதனால் 3வது கால் ஆட்டத்தில் இந்தியா 5, ஜெர்மனி 3 கோல்கள் அடித்தன. அதன் பிறகு ஜெர்மனி ஒரு கோல் அடித்தது. பிறகு ஜெர்மனி தாக்குதலை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தலைமையில் வெற்றிகரமாகத் தடுத்து வரலாறு படைத்தது. இந்தியாவுக்கு 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம். மேலும் ஜெர்மனியை 5-4 என்று இந்தியா அணி வீழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published.