இந்தியா இன்று முதல் அஞ்சலக சேமிப்பு கணக்கிலும் அபராதம்! December 11, 2020December 31, 2020 admin 0 Comments அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் இன்று முதல் ரூ.500க்கு குறைவாக இருப்புத் தொகை இருந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது.நாடெங்கும் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்க அரசு மிகப் பெரிய விளம்பரங்களைச் செய்து வருகிறது. இவ்வாறு சேமிப்புக்களுக்குத் தொடங்குவோர் அனைத்து தபால் நிலையங்களிலும் பணத்தைப் போடவும் எடுக்கவும் முடியும். ஏடிஎம் களில் ஒரு நாளைக்கு ரூ.25000 வரை எடுக்கலாம். கணக்கு தொடங்கும் போதோ அல்லது இடையிலோ வாரிசு தாரர்களை நியமனம் செய்யமுடியும்.தற்போது நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் குறைந்த பட்சமாக ரூ,.20 செலுத்தி கணக்கைத் தொடங்கலாம்.செக் புத்தகம் சேவை தேவைப்படுவோர் குறைந்தது ரூ.500 இருப்புத்தொகை வைக்க வேண்டும் எனவும் தேவைப்படாதோர் குறைந்தது ரூ.50 இருப்பில் வைத்திருந்தால் போதும் என்னும் நிலை இருந்தது. இதனால் பல ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அஞ்சலக சேமிப்புக் கணக்கைத் தொடங்கினர்.தற்போது இவர்களுக்கு பேரிடியாக அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் குறைந்தது ரு. 500 வைத்திருக்க வேண்டும் என கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. இன்று குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.500 இல்லாதவர்கள் உடனடியாக ரூ.500 செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இவ்வாறு செலுத்தாதவர்களின் கணக்கில் இருந்து மார்ச் முதல்ஆண்டுக்கு ரூ.100 அபராத கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.K.N. ஆரிப் செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.