இந்தியாவுக்கு 3வது பதக்கம்; வெண்கலம் வென்றார் லவ்லினா.

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார். 

டோக்கியோ ஒலிம்பிக் (Tokyo Olympic Games) பெண்களுக்கான குத்துச்சண்டை வெல்டர் வெயிட் எடைப் பிரிவில் புசெனாஸ் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்தும் 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்று நெருக்கமாக வந்தார். இரண்டாவது சுற்றிலும் அதே போல் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்து 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்று நெருங்கி வந்து தோற்றார். அடுத்த சுற்றில் துருக்கி வீராங்கனை சர்மெனேலி மீண்டும் 10 புள்ளிகளை அனைத்து ஜட்ஜ்களிடமிருந்து பெற லவ்லினா 9,9,9, 8,8 என்று பெற்று பின் தங்கினார். 

இதனையடுத்து  துருக்கி வீராங்கனை சிறப்பாக விளையாடி 5-0 என லவ்லினாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதியில் தோல்வியடைந்த லவ்லினா இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டார். இதனால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால் வெண்கலப் பதக்கத்தை லவ்லினா வென்றுள்ளார். இதனால் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்தது. இதுவரை இந்தியா 1 வெள்ளி 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.