இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வருவோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவுபடி அபராதம்!
சென்னை: ஆகஸ்ட் 4 வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் செல்லும்போது தலைக்கவசம் அணியாததால் விபத்துக்களில் சிக்கி தலையில் காயங்கள் ஏற்பட்டு இறந்து விடுகின்றனர்
இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர் பின்னால் அமர்ந்திருப்பவர் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தலைக்கவசம் ( ஹெல்மெட் ) அணிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் மேம்பாலம் கிழ் பகுதியில் S-2 ஏர்போர்ட்
S-3 மீனம்பாக்கம் காவல் நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு/ வெங்கடேஷ் அவர்கள் ஆலோசனையில் உதவி காவல் ஆய்வாளர்
திரு/சுந்தர் ராஜ், திரு/ செல்வின் ஆகியோர் தலைமையில் போக்குவரத்து தலைமை காவலர்கள் சந்தோஷ் மற்றும் காவலர்கள் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர்.
இந்த வாகன தணிக்கையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை ரூபாய் 100/-விதிக்கப்பட்டு சாலைகளில் செல்லும்போது தலைகவசம் ( ஹெல்மெட் ) அணிய தமிழக போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவுரையும் வழங்கப்பட்டது.
NEWS; S.MD.RAWOOF