நடிகர் தனுஷ் வழக்கில் நாளை உத்தரவு.

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷ் வழக்கில் நாளை உத்தரவு.

கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் 50% வரி செலுத்தினால் காரைப் பதிவு செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில் ரூபாய் 30.33 லட்சம் வரி செலுத்தியதாக நடிகர் தனுஷ் (Dhanush) கூறியதால் விதிகளைப் பின்பற்றிப் பதிவு செய்ய 2016 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்பின் இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் நாளையே உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நாளை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பிக்கிறார். ஏற்கனவே சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்றம், அவரை விமர்சித்திருந்த நிலையில், தற்போது தனுஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.