தண்ணீரின் மூலம் நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க RO வாட்டர்.

தண்ணீர் மற்றும் காற்றைக் கூட இன்று காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாளை இன்னும் என்னவெல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை நமக்கு ஏற்படும் என்பதை நினைத்தாலே பயமாக தான் இருக்கிறது. நிலத்தடி நீரை சர்வ சாதாரணமாக குடிநீராக கொண்டு வந்த நம் மக்கள் இன்று ஆர்‌ஓ வாட்டர் என்னும் கேன் வாட்டரை எந்த சத்தும் இல்லாமல் சக்கையை குடித்து வருகிறோம்.

கேன் வாட்டரில் ஆர்‌ஓ மற்றும் ஐ‌வி தொழில் நுட்பம் மூலமாக தண்ணீரில் இருக்கும் தாது பொருட்களை பிரித்தெடுத்து வெறும் சக்கையை மட்டும் குடிநீராக நாடு முழுவதும் விநியோகித்து வருகிறார்கள். இதனை கவுரவமாக நினைத்து குடித்துக் கொண்டிருக்கும் நமக்கு அதன் விபரீதத்தை உணர முடியாதது வேதனைக்குரிய விஷயம் தான். கேன் வாட்டரை கூட சத்து மிகுந்த நல்ல தண்ணீராக மாற்றக்கூடிய சக்தி இந்த பொருட்களுக்கு உண்டு. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம். –

– நிலத்தடி நீரை உலகமயமாக்கல் கொள்கை மூலம் பல்லாயிரம் கோடிக்கு வருமானம் ஈட்டக்கூடிய வியாபாரப் பொருளாக மாற்றி விட்டார்கள். அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் குடிநீரை கேன் வாட்டர் மற்றும் பாட்டிலில் அடைத்து மினரல் வாட்டராக மக்களிடையே விளம்பரப்படுத்தி வருகின்றது. ஆனால் அதில் நம் உடலுக்குத் தேவையான தாது பொருட்கள் கிடைக்கின்றனவா? என்றால், இல்லை என்று தான் கூற முடியும்.

Leave a Reply

Your email address will not be published.