மூட்டு வலி, குதிகால் மற்றும் கணுக்கால் வலி உடனே தீர எளிய வழிமுறை!
முதல் வழிமுறை: அத்தியாவசிய எண்ணெய் என்று கூறப்படும் எண்ணெய் வகைகளில் யூகலிப்டஸ் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவையும் அடங்கும். இந்த மூன்று எண்ணெய்களில் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது கடைகளில் சென்று வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வாளியில் பாதி அளவிற்கு நல்ல சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் மேற்கூறிய எண்ணெய் வகைகளில் ஏதாவது ஒன்றை திறந்து மூன்று துளிகள் மட்டும் எண்ணெயை தண்ணீரில் விடுங்கள்.அந்த தண்ணீரில் உங்களுடைய கால்கள் பத்திலிருந்து, பதினைந்து நிமிடங்கள் வரை வைத்திருந்தால் பாத வலி, கணுக்கால் வலி, மூட்டு வலி அத்தனையும் சரியாகிவிடும். பின்பு சுத்தமான தண்ணீர் கொண்டு கால்களை கழுவி விடலாம். யூகலிப்டஸ் எண்ணெயில் வலியை நீக்கக்கூடிய மற்றும் அழற்சியில் இருந்து பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் ஆற்றல் உண்டு. கிராம்பு எண்ணெயில் வலி நிவாரணியாக செயல்படக் கூடிய தன்மைகள் உண்டு. லாவண்டர் எண்ணெய் வலியை கட்டுப்படுத்துகிறது.