புரோகிதர்கள் 200க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் மோசடி!

அடுத்தடுத்து புகார்களில் சிக்கும் ஹெலிகாப்டர் சகோதரர்கள், புரோகிதர்கள் 200க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் பலநூறு கோடி வரை மோசடி செய்ததாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்ஆர்கணேஷ், எம்ஆர் சுவாமிநாதன் மீது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர்  சகோதரர்கள் உட்பட ஐந்து பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதுவரை சகோதர்களின் மேலாளர் ஸ்ரீகாந்தன், கணக்காளர் மீரா மற்றும் ஸ்ரீராம், வெங்கடேஷன், கணேஷின் மனைவி அகிலா ஆகிய ஐந்து பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட  புரோகிதர்களிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.