சறுக்கி விளையாடும் பாண்டாக்களின் குழந்தைத்தனம்.
விளையாட்டு எப்போதும் குதூகலத்தைத் தரும், அது விளையாடுபவர்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்கும் தான்.
சறுக்கி விளையாடும் பாண்டாக்களின் வீடியோ மனதை மயக்குகிறது. சறுக்கு பலகையில் ஏற முயற்சிக்கும்போது, இந்த அழகான பாண்டா குட்டிகள் விழுந்து ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது ரசிக்கத் தூண்டுகிறது. தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக கழிக்கின்றன.
இந்த வீடியோவை பார்க்கும்போது, சிறுவயதியில் சறுக்கி விளையாடிய நினைவலைகள் மனதை நெகிழச் செய்கின்றன. வெகுளியான குட்டி பாண்டாக்களின் விளையாட்டை பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஆனால் அனைவருக்கும் தோன்றும் ஒரே பொதுவான எண்ணம், ‘விளையாட்டு எப்போதும் குதூகலத்தைத் தரும், அது விளையாடுபவர்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்கும் தான்’ என்பதே.
பாண்டாக்கள் சறுக்குமரத்தில் சறுக்கி விளையாடுவதையும் உருட்டுவதையும் காட்டும் இந்த வீடியோ வெளியாகி இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்துள்ளது. பாண்டாக்கள் ஒரு பூங்காவின் சறுக்கு மரத்தில் சறுக்கி விளையாடி மகிழ்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.