மு. கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
சட்டப்பேரவையில் நடக்கவிருக்கும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படும் விழாவை புறக்கணிக்க உள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் 100 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி நடக்கவுள்ள நிகழ்வுகளில் குடியரசுத் தலைவர் பங்கேற்பார். தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவார்.
இந்த விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் கலந்து கொள்வார்கள் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்டப்பேரவையில் நடக்கவிருக்கும் இந்த விழாவை புறக்கணிக்க உள்ளதாக முன்னாள் அதிமுக (AIADMK) அமைச்சர் ஜெயக்குமார் குறியுள்ளார். இது குறித்து மேலும் கூறிய அவர், சட்டமன்ற வரலாற்றை திமுக மாற்றியமைத்து விழா கொண்டாடுவதாக குற்றம் சாட்டியிள்ளார்.