CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று 10ஆம் வகுப்புக்கான முடிவுகளை அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று 10ஆம் வகுப்புக்கான முடிவுகளை அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வு முடிவுகள் இன்று cbseresults.nic.in என்ற வலைதளத்தில் அறிவிக்கப்படும். எனினும், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் தேதி மற்றும் நேரங்களை வாரியம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை
மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbseresults.nic.in, cbse.gov.in என்ர வலைதளங்களில் சரிபார்க்கலாம்.
ஜூலை 30, வெள்ளிக்கிழமை 12 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை CBSE அறிவித்த நிலையில், 10 ஆம் வகுப்பு முடிவுகளுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர், வெள்ளிக்கிழமை அன்று இது குறித்து கூறுகையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை விரைவில் அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் வெளியீட்டு தேதி குறித்து வாரியம் எதுவும் சொல்லவில்லை.