வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி

இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக்கின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

டோக்கியோ: இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக்கின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் போட்டியிட்ட இந்திய மகளிர் அணி, அபாரமாக ஆடி மிகச்சிறந்த அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

குர்ஜீத் ஒரு அற்புதமான கோலை அடித்தார்

குர்ஜித் கவுர் இந்தியாவின் தரப்பில் இருந்து அடிக்கப்பட்ட ஒரே கோலை அடித்தார். வலிமையான அணியாக கருதப்படும் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் முழுவதும் மிகவும் சிரமப்பட்டும் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய (Australia) அணியால் இந்திய தாக்குதலை முறியட்டித்து ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.