6 ஜிபி ரேம் கொண்ட Xiaomi பட்ஜெட் ஸ்மார்ட்போன்.
Xiaomi நட்பு தின விற்பனையில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் ஷாப்பிங் செய்ய வாய்ப்பு வழங்கியுள்ளது.
சியோமி (Xiaomi) அதன் தளத்தில் நட்பு தின விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் ஷாப்பிங் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீங்கள் எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளராக இருந்தால், விற்பனையில் ரூ .3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும், அதே நேரத்தில் நீங்கள் எச்டிஎஃப்சி கார்டு பயன்படுத்துபவராக இருந்தால் விற்பனையில் இருந்து ரூ .7,500 வரை தள்ளுபடி பெற முடியும். இதன் முழு விவரத்தை இங்கே பார்போம்.
Mi.com இலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, Redmi Note 10S இல் வாடிக்கையாளருக்கு ரூ .1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது, இந்த தள்ளுபடியை (Discount on Smartphone) நீங்கள் HDFC கார்டு மூலம் பெறலாம். Redmi Note 10S 6.43-இன்ச் முழு எச்டி + AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 1080 × 2400 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. தொலைபேசி திரையின் பாதுகாப்பிற்காக, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பொருத்தப்பட்டுள்ளன.