தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D43 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் (GV Prakash) இசையமைக்கிறார். தனுஷ் 43 (Dhanush) படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்குத் தலைப்பை இறுதி செய்யாமல் படப்பிடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தது படக்குழு. இந்நிலையில் தற்போது இன்று தனுஷ் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.