132 நாட்களுக்குப் பிறகு 30,000-க்கும் குறைவானோர் தொற்றால் பாதிப்பு…
132 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் 30,000 க்கும் குறைவானோர் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27, 2021) தெரிவித்துள்ளது.
புதுடில்லி: 132 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் 30,000 க்கும் குறைவானோர் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27, 2021) தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 29,689 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
சிகிச்சையில் இருக்கும் கொரோனா (Coronavirus) நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 124 நாட்களுக்குப் பிறகு 4,00,000 க்கு கீழே வந்துள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3,98,100 ஆக உள்ளது. இது மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 1.27% ஆகும்.
வாராந்திர நேர்மறை விகிதம் (Positivity Rate) இப்போது 2.33% ஆகவும், தினசரி நேர்மறை விகிதம் 1.73% ஆகவும் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.