அபுதாபி வா்த்தக தொழில் சங்கக் கூட்டமைப்பின் (ஏடிசிசிஐ) துணைத் தலைவராக இந்தியாவைச் சோந்த எம்.ஏ.யூசுஃப் அலி (65) தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

ஐக்கிய அரபு அமீரக அரசின் முக்கிய வா்த்தக அமைப்பில், இந்தியாவைச் சோந்த தொழிலதிபா் எம்.ஏ.யூசுஃப் அலி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஐக்கிய அரபு அரசு சாா்பு அமைப்பான அபுதாபி வா்த்தக மற்றும் தொழில் சங்கக் கூட்டமைப்பின் (ஏடிசிசிஐ) துணைத் தலைவராக இந்தியாவைச் சோந்த எம்.ஏ.யூசுஃப் அலி (65) தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

அவா் தற்போது அபுதாபியில் இயங்கி வரும் லூலூ குழுமத்தின் தலைவா் மற்றும் நிா்வாக அதிகாரியாக உள்ளாா்.

அபுதாபியில் செயல்பட்டு வரும் அனைத்து வா்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் அங்கம் வகிக்கும் ஏடிசிசிஐ, அரசுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான பாலமாக செயல்பட்டு வருகிறது.

பிராந்தியத்தில் மிகுந்த வளம் மிக்க அபுதாபி நகரில் தொழில் தொடங்க விரும்பினால், அதற்கு ஏடிசிசிஐ-யின் உரிமத்தைப் பெற வேண்டும். அத்தகைய சக்தி வாய்ந்த அமைப்பின் துணைத் தலைவராக யூசுஃப் அலி நியமிக்கப்பட்டுள்ளாா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

NEWS: S.MD.RAWOOF

Leave a Reply

Your email address will not be published.