பவானி தேவிக்கு பிரதமர் ஆறுதல்…

ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, 32வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் துவங்கியது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி வாள் வீச்சு போட்டியில் பங்கேற்றார்.

Tokyo Olympics 2020: ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, 32வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் துவங்கியது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி வாள் வீச்சு போட்டியில் பங்கேற்றார்.

இந்தப் போட்டியில் முதல் சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடிய பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார். இரண்டாவது சுற்றில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மனோனுடன் மோதியதில், பவானி தேவி 7-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். 

அதை அடுத்து அவர், I am sorry என ட்வீட் செய்திருந்தார். மேலும் தனக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.