Maruti Suzuki அறிவித்துள்ள ஜூலை மாத Offer விவரங்கள்
Arena lineup மற்றும் Ertiga உள்ளிட்ட பல மாருதி சுசுகி கார்களில் இந்த நன்மைகள் பொருந்தும்.
மாருதி ஆல்டோ
இந்த காருக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ .3,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. இந்த காரின் பெட்ரோல் என்ஜின் மாடல்களுக்கு ரூ.25,000 மற்றும் CNG என்ஜின் மாடலுக்கு ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் இருக்கிறது.
மாருதி செலிரியோ
மாருதி செலிரியோ மற்றும் செலிரியோ எக்ஸ் ஆகிய இரண்டு கார்களுக்கும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ .3,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி டிசையர்
இந்த செடான் ரக காருக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் உள்ளிட்ட ஆஃபர்களை அறிவித்து உள்ளது.
மாருதி ஸ்விஃப்ட்
மாருதி ஸ்விஃப்ட் கார் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்டுடன் கிடைக்கிறது. காரின் LXI மாடலுக்கு ரூ.10,000 கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் ZXI மற்றும் ZXI+ வேரியண்ட்களில் ரூ.15,000 கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. மாருதி வேகன்-ஆர்
இந்த வாகனத்திற்கு ரூ.15,000 கேஷ் டிஸ்கவுன்ட், CNG என்ஜின் மாடல்களுக்கு ரூ.5,000 கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. இது தவிர கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ.3,000 மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.15,000 உள்ளிட்ட சலுகைகள் இருக்கின்றன.