விஷால் – ஆர்யா நடிக்கும் எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு
ஆர்யா – விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
Vishal-Arya Enemy: பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் அவன் இவன். இந்த படத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து எனிமி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்கள்.
விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி (Enemy) படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு (Vishal) ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு (Arya) ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.இந்த தகவலை நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். இந்நிலையில், தற்போது எனிமி படத்தின் டீசர் குறித்து படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி அதாவது நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.