ரயில் நிலைய பெயர்கள் மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு எழுத்தில் எழுதப்படுவதன் காரணம்…
ரயிலில் பயணிக்காதவர் என யாரும் இருக்க முடியாது. ரயில் பயணங்கள், நமது வாழ்வில் பல மகிழ்ச்சிகரமான அனுபவங்களையும், நினைவுகளையும் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
- நம்மில் ரயிலில் பயணிக்காதவர் என யாரும் இருக்க முடியாது.
- ரயில் பயணங்கள், நமது வாழ்வில் பல மகிழ்ச்சிகரமான அனுபவங்களையும், நினைவுகளையும் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
ரயில்வே கிராசிங் அல்லது ரயில் நிலையம் என எல்லா இடங்களிலும் மஞ்சள் நிறத்தைப் பார்த்திருக்க வேண்டும். குறிப்பாக ரயில் நிலையத்தின் பலகைகளில், நிலையத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும், இதில் பெரும்பாலும் மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணங்களின் கலவையாக இருக்கும். இதன் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. மஞ்சள் தவிர வேறு எந்த நிறத்தையும் பயன்படுத்துவதில்லை.
மஞ்சள் நிறத்தை பயன்படுத்துவதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்
ரயில் நிலையத்தின் பெயர் மஞ்சள் பலகையில் (Yellow Board) எழுதப்பட்டதற்கு மிகப் முக்கிய காரணம், மஞ்சள் நிறம் மிகவும் பிரகாசமாக நிறமாக இருக்கிறது, இது தூரத்திலிருந்து ரயில் ஓட்டுநருக்கு அதாவது லோகோ பைலட்டுக்கு நன்றாக தெரியும் நிறமாகும். இது தவிர, மஞ்சள் நிறமும் கவனம் என்பதை குறிக்கிறது. ரயில் நிலையத்தில் பலகை மஞ்சள் நிறத்தின் பின்னணியிப் கருப்பு நிறத்தில் வரையப்பட்டு இருப்பதற்கான காரணம் இதுதான்.