Weather Update: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மழைபெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது.,

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் (Tamil Nadu) இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre) தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.