ஜியோவின் அசத்தும் Buy One Get One சலுகை…
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவ்வப்போது பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்கிறது. ரிலையன்ஸ் ஜியோ பல மலிவான திட்டங்களைக் கொண்டுள்ளது.
Reliance Jio: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவ்வப்போது பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்கிறது. ரிலையன்ஸ் ஜியோ பல மலிவான திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த முறை ஜியோ ஒரு சிறப்பு சலுகையுடன் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த சலுகையில் (Reliance Offer) வரும் ரூ .200-க்கும் குறைவான திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இதில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். ஜியோவின் இந்த திட்டம் 185 ரூபாய்க்கானது. இந்த ரீசார்ஜ்ஜை ஜியோ போன் நபர்களால் மட்டுமே செய்ய முடியும். இந்த திட்டத்தில் இப்போது ’buy one get one’ இலவச சலுகை கிடைக்கிறது. அதாவது, நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ .185 ரீசார்ஜ் செய்தால், இரண்டாவது மாதம் அதை இலவசமாகப் பெறலாம். இந்த திட்டத்தின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
ஜியோவின் ரூ 155 திட்டத்திலும் பை ஒன் கெட் ஒன் சலுகை உள்ளது. அதாவது, 56 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி தரவு (Data) கிடைக்கும். அதாவது, இந்த திட்டத்தில் உங்களுக்கு 56 ஜிபி தரவு கிடைக்கும்.
இந்த திட்டத்தில், நீங்கள் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ளலாம். மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவீர்கள். இந்த திட்டத்துடன், ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் உங்களுக்கு வழங்கப்படும்.