48MP கேமராவுடன் Samsung Galaxy M21 2021 Edition அறிமுகம்
Samsung Galaxy M21 2021 Edition ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி எம் 21 ஸ்மார்ட்போனின் சற்றே மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வருகிறது. இதன் முழு விவரத்தை இங்கே பார்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்21 2021 (Samsung Galaxy M21 2021) எடிஷன் ஆர்க்டிக் புளூ மற்றும் சார்கோல் பிளாக் நிறங்களில் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் இல் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.14,499 க்கும் வாங்க கிடைக்கும். 6.4 இன்ச் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி இதில் உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா உள்ளது.