தியாக பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பக்ரீத் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தியாக பெருநாளான பக்ரீத் (Eid-al-Adha) பெருநாள் நல்வாழ்த்துகளை இதயபூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்.