அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.97 அதிகரித்துள்ளது.
பொதுமுடக்கக் காலத்தில் அதிரடியாக ஏற்றத்தைக் கண்ட தங்கம் விலை, சுமார் ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வைச் சந்தித்தது. அதன் பிறகு, தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்து ரூ.38 ஆயிரத்தில் நீடித்தது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை தொடர் சரிவை கண்டதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தங்கம் விலை இனிமேல் குறைந்து விடும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது தங்கம் விலை அதிரடியாக ஏற்றத்தை சந்தித்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.97 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,733க்கு விற்பனையாகிறது.அதன் படி, சவரனுக்கு ரூ.776 உயர்ந்து ரூ.37,864க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.90 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,500க்கும் விற்பனையாகிறது.
S. சரவணன்
செய்தியாளர் தமிழ்மலர் மின்