தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ்குமார் கைது

திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சூசையாபுரம் கடந்த மாதம் 11ஆம் தேதி அங்கு உள்ள அரிசி கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம ஆசாமி ஒருவர் திருடி சென்றுள்ளார்.இது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆசாமியை பிடிக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் #திருமதிவனிதா (இ.கா.ப) அவர்கள் உத்தரவின் பேரில் துணை ஆணையர் #உயர்திருரவி குற்றம் மற்றும் போக்குவரத்து அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர் வெற்றிவேந்தன் மற்றும் ஆய்வாளர் கணேசன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் தங்கவேல் தலைமை காவலர் சங்கரநாராயணன் முதல் நிலை காவலர் ராஜசேகர் மற்றும் காவலர் பிரபாகரன் சபீக் ராஜா ஆயுதப்படை காவலர் அஜித்குமார் செல்வகணபதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த மர்ம ஆசாமி சுரேஷ்குமார் என்ற குளித்தலை சுரேஷ் பிடித்தனர்.மேலும் அவரிடம் இருந்து 3 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் சரக்கு வாகனத்தில் செம்மரம் மட்டும் எரிசாராயம் கடத்தும் சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் குமாரை கைது செய்த தனிப்படையினரை மாநகர காவல் ஆணையர் திருமதி வனிதா (இ.கா.ப) அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

செய்தியாளர் கே.ஸ்ரீ சரவணகுமார் ,

திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published.