தூத்துக்குடியில் கொலை மிரட்டல், திருட்டில் தொடர்புடைய ரவுடி கைது
தூத்துக்குடியில் கொலை மிரட்டல், திருட்டு வழக்கு உட்பட 6 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது – அரிவாள் பறிமுதல்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ்,சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (14.07.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கந்தசாமிபுரம் ஜங்ஷன் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி தாமோதரன் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (20) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தராததால் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த அரிவாளயும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இசக்கி ராஜா என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 5 வழக்குகள் என மொத்தம் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் செல்வராஜ்
தூத்துக்குடி