மாஸ்டர் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடை
மாஸ்டர் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்க ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இந்த மாஸ்டர் கார்டு நிறுவனம் தங்களிடம் இணையும் பயனாளர்களின் சொந்த விவரங்களை தரவுகளை பார்வையிடுவதால், இது தவறான செயல் என்பதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு தடை விதித்துள்ளது. மேலும் ஏற்கனவே மாஸ்டர் கார்டுகள் பயன்படுத்தி வரும் பயனாளர்கள் அவர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. இனி புதியதாக மாஸ்டர் கார்டு உபயோகிக்க நினைக்கும் பயனாளர்களுக்கு மாஸ்டர் கார்டு வழங்க கூடாது என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு கூறியுள்ளது.