அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி…

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி – திமுக சார்பில் பல மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும்

வரும் காலங்களில் மாரத்தான் போட்டிகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

கொரோனாவுக்கு பிறகு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி முக்கியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த ‘ஓடலாம் நோயின்றி வாழலாம்’ என்ற தலைப்பில் லண்டனில் நடைபெறும் விர்ச்சுவல் சேலஞ்ச் மாரத்தானில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இன்று அதிகாலையிலே கிண்டி லேபர் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவர் மெரினா கடற்கரையில் நிறைவு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கான மாரத்தான் போட்டிகள் மறுக்கப்பட்டன. வரும் காலங்களில் மாரத்தான் போட்டிகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும். இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் திமுக சார்பில் பல மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும்.

டெங்குவின் தொடர்ச்சி தான் ஜிகா வைரஸ். ஜிகா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களையே நோய் தாக்குகிறது.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீக்குவதற்கு நேற்றிரவு 5 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் இனி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு வராது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் ரஹ்மான் தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.