28 ஆண்டு கால கனவு நிஜமானது..
பிரேசில்: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரேசிலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது அர்ஜெண்டினா.
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இதுவரை 29 முறை கோபா கோப்பை பைனலில் விளையாடி 15 முறை கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் கோபா கோப்பையை அதிக முறை வென்ற உருகுவேயின் சாதனையை (15 முறை) அர்ஜெண்டினா சமன் செய்துள்ளது.