தடுப்பூசிகளின் பக்கவிளைவாக இதய அழற்சி..
கொரோனாவுக்கான ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு கூறியுள்ளது.
பொதுவாக இந்த மாதிரியான பக்க விளைவுகள், இளம் வயது ஆண்களுக்கு ஏற்படுவதாக ஐரோப்பிய மருத்துவ முகமை கூறியுள்ளது.
கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை விட அதிகமாக இருப்பதாக மருந்து பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.
இருப்பினும், மருத்துவர்களும் நோயாளிகளும் இதயத்தில் ஏற்படும் அழற்சி சார்ந்த அறிகுறிகள் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.