உலகில் மிகவும் குள்ளமான வெள்ளைப்பசு..
உலகில் மிக குள்ளமான பசு ஒன்று வங்கதேசத்தில் உள்ளது. இந்த பசு உலக சாதனையை படைத்துள்ளது.
சமீபகாலமாக ஒரு வெள்ளை பசுவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த அனைவரும் இது போட்டோஷாப்பை செய்யப்பட்டது என்று கூறினார். ஆனால் இது உண்மையான பசுதான். வங்கதேச தலைநகர் தாக்கா பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அக்ரோ ஃபார்ம் என்ற மாட்டுப் பண்ணையில் இந்த பசு உள்ளது. இந்த பண்ணையில் உள்ள ராணி என்ற 20 மாத பசு தான் இது.
இந்த பசுவின் மொத்த அளவானது 20 இன்ச் அதாவது 51 சென்டிமீட்டர் உயரமும். 26-inch 66 சென்டிமீட்டர் நீளமும் கொண்டது.
இதற்கு முன்னதாக கேரளா மாநிலத்தை சேர்ந்த பசு ஒன்று உலகிலேயே குள்ளமான பசுவாக இருந்தது அதன் உயரம் 61 சென்டிமீட்டர்.
இது அதைவிட குறைவாக இருப்பதால் தற்போது உலகின் மிக குள்ளமான பசு என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த பசு குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியானதிலிருந்து மக்கள் அனைவரும் இந்த பசுவை கண்டு வருகின்றனர்.
செய்தி: S.MD. ரவூப்