உலக நாடுகள் கவலை..
ஆப்கானிஸ்தானில் 85% நிலப்பரப்பு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானிற்கான மருந்துகள் மற்றும் பொருட்களைப் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபானகளின் இந்த முன்னேற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள ரஷ்யா உள்பட பல்வேறு மேற்கு நாடுகள் , இனி தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கவலை அடைந்துள்ளன.