முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய டிஜிபி சைலேந்திர பாபு சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் தமிழக காவல்துறை புதிய டிஜிபி சைலேந்திர பாபு IPS நேரில் சந்திப்பு!

சென்னை தமிழ்நாடு காவல்துறையின் 30- வது புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ், பதவியேற்ற நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தார்.

தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய
IAS, IPS, நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மிகவும் நேர்மையான அதிகாரி மக்களுக்கு நெருக்கமானவர் கண்டிப்பானவர் என்று பெயர் எடுத்த டிஜிபி திரு/ சைலேந்திர பாபு IPS டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் டிஜிபியாக திரு/ சைலேந்திர பாபு IPS பதவியேற்ற நிலையில் தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தார்.

பொதுவாக புதிய டிஜிபிக்கள் பதவி ஏற்றபின் முதல்வரை சென்று சந்திப்பது வழக்கம். முதல்வரை சந்திக்கும் பொழுது மரியாதை நிமித்தமாக பூங்கொத்து கொடுப்பது வழக்கம். ஆனால் முதல்வர் பூங்கொத்துகளை ஏற்பது இல்லை என்பதால் டிஜிபி திரு/ சைலேந்திர பாபு IPS தான் எழுதிய 24 போர் விதிகள் என்ற தலைப்பு புத்தகத்தை முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் இடம்
கொடுத்தார்கள்.

இந்த சந்திப்பில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதைத் தாண்டி முதல்வர் திரு/ மு.க. ஸ்டாலின் இடம்
15- நிமிடம் முக்கியமான சில விஷயங்களை தமிழக டிஜிபி திரு/ சைலேந்திரபாபு IPS தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள்.

முக்கியமாக மக்களிடம் போலீசார் நடந்து கொள்ளும் விதத்தை மாற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் தமிழக காவல்துறை டிஜிபி இடம் சொன்னதாக தெரிகிறது.

மக்களை போலீசார் தேவையின்றி அடிக்கக்கூடாது தவறு செய்தவர்களை தண்டிப்பது வேறு பொதுமக்களை தாக்குவது வேறு போலீஸ் பொதுமக்களை தாக்கக் கூடாது என்று டிஜிபி திரு/ சைலேந்திர பாபு IPS முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டதாக தெரிகிறது.

அசைன்மென்ட்!

ஆட்சிக்கு வந்த தொடக்கத்திலேயே போலீசார் மக்களிடம் கனிவாக நடக்க வேண்டும் என்று முதல்வர் திரு/ மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்

ஆனால் அதையும் மீறி சேலத்தில் போலீசார் தாக்கியதில் முருகேசன் என்ற வியாபாரி பலியானார்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் தமிழக காவல்துறை டிஜிபி திரு/ சைலேந்திர பாபு IPS க்கு உத்தரவிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு!

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் அதிமுக தலைகள் மற்ற கட்சி தலைகள் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்.

10 வருடத்தில் நிறையபேர் ஊருக்குள் கட்டப்பஞ்சாயத்தில் குதித்து விட்டனர் இவர்களை தடுக்கும் விதமாக செயல்பட வேண்டும்.
ஆன்லைன் குற்றங்கள் அவதூறுகள் முறைகேடுகள் அதிகரித்துவிட்டன இரண்டையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் முதல்வர் திரு/ மு.க. ஸ்டாலின் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு விடம் தெரிவித்துள்ளார்

ஆன்லைன்!

முக்கியமாக சமூகவலைதளங்களில் குற்றங்களில் ஈடுபட்டு சத்தம் என்று எஸ்கேப் ஆகும் நபர்களுக்கு குறி வைக்கும் திட்டம் உள்ளதாம் அதோடு கடந்த பத்து வருடங்களில் அரசு நடவடிக்கை எடுக்காத முக்கியமான சில புகார்களை தோண்டி எடுத்து விசாரிக்கும் அசைன்மென்ட் தமிழக காவல்துறை டிஜிபி திரு/ சைலேந்திர பாபு IPS பல அதிரடி நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்துள்ளார்கள்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.