கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்!
கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு தீப திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. முருகன், சிவ ஆலயங்கள் மட்டுமல்லாது பெருமாள் ஆலயங்களிலும் தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. திருமலை ஏழுமலையான் கோவிலில் 1008 அகல் விளக்குகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.
N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்