இந்திய வம்சாவழி மருத்துவர்கள் ரூ.16 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடை
அமெரிக்க நாட்டிலுள்ள புளோரிடா மாகானத்தில் வசிக்கும் இந்திய வம்சாவழி மருத்துவர்கள் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு ரூபாய் 16 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 ஆக்சிஜென் செறிவூட்டிகள் வழங்கினார்கள். இதனை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பும் வகையில் செங்கற்பட்டு மாவட்ட பொது சுகாதார துணை இயக்குநர் மருத்துவர் ப்ரியா இராஜ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாற்றத்தை நோக்கி அமைப்பு, மற்ற பயனாளிகளுக்கும் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.இதில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு இந்த பணியை மேற்கொண்டர். செய்தியாளர். சி. கவியரசு