நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விமானம் மூலம் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்
ரஜினிகாந்திற்கு உடல் நிலை சரி இல்லாத பொது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமடைந்தார்.
அதற்கு பின்புதான் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அன்னத்தை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த பொழுது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார் பின்னர் படங்களில் நடிக்க தொடங்கிய ரஜினிகாந்த்.
கொரோன அச்சுறுத்தல் காரணத்தினால் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு செல்லாமல் இருந்தார்.
அமெரிக்காவில் கொரோன பாதிப்பு குறைந்ததால் அங்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதனை அடுத்து இன்று அதிகாலை விமானம் மூலம் அமெரிக்க புறப்பட்டு சென்றார்.
( தமிழ் மலர் செய்தியாளர் ம.ஜான் தினகரன் )